வவுனியா, தரணிக்குளம் பகுதியில் கைகள், கால்கள் துண்டிக்கப்பட்டு உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்னமும் இனங்காணப்படவில்லை.
இதனால், உடற்கூற்றுப் பரிசோதனைகள் தாமதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட இந்தச் சடலம் வடமாகாணத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அந்தப் பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
இதனால், சடலத்தின் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைகள் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்ற நிலையிலேயே சடலம் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.