சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
12 ஆண்டுகள் தலைவராக இருந்த தோமஸ் பேச் பதவி விலகவுள்ள நிலையில், குறித்த பதவிக்கான தேர்தலில் 7 பேர் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் முன்னாள் நீச்சல் வீராங்கனையும், சிம்பாப்வே விளையாட்டுத்துறை அமைச்சருமான கிறிஸ்டி கவன்ட்ரி (Kirsty Coventry), உலக மெய்வல்லுநர் சம்மேளன தலைவர் செபஸ்டியன் கோ (Sebastian Coe), சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிர்வாக குழுவின் பிரதித்தலைவர் ஜூவான் ஆன்டோனியா சமராஞ்ச் (Juan Antonio Samaranch) ஆகியோரில் ஒருவர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சர்வதேச சைக்கிளிங் சங்கத் தலைவர் டேவிட் லப்பரடியன்ட் (David Lappartient) ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத் தலைவர் மோரினாரி வதானாப் (Morinari Watanabe), சர்வதேச ஸ்கை மற்றும் ஸ்னோபோர்டு தலைவர் ஜோஹன் எலியாஸ் (Johan Eliasch), ஜோர்தான் நாட்டு இளவரசர் பைசல் பின் ஹூசைன் (Feisal bin Hussein) ஆகியோரும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவிக்காகப் போட்டியிடுகின்றனர்.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.