ரி-20 துடுப்பாட்ட வீரர்களில் தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முதலிடத்தில் உள்ள வீரரான நிக்கோலஸ் பூரன், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
29 வயதான அவர், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக 61 போட்டிகளில் விளையாடி, 1,983 ஓட்டங்களை எடுத்துள்ளதுடன், 106 ரி-20 போட்டிகளில் விளையாடி 2,275 ஓட்டங்களை பெற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவர் 136.39 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அதிகபட்ச ஓட்டம் இதுவாகும். 2024 ரி-20 உலகக் கிண்ணத்தில் கிறிஸ் கெய்லை முந்திய பூரன், ரி-20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் வீரராகவும் தனது அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராகவும் திகழ்கிறார். அவர் இறுதியாக 2024 டிசம்பரில் மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடினார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.