2022,2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றி வெற்றியீட்டிய மாங்குளம் அறிவொளி கல்வி நிலைய மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு மாங்குளம் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது
அறிவொளி கல்விநிலைய நிர்வாகி ப.ஈழஅமலா தலமையில் நடைபெற்ற நிகழ்வில் சாதனை மாணவர்கள் பாடசாலை மண்டபம் வரை பான்ட் வாத்திய இசையுடன் வரவேற்க்கப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது
கலை நிகழ்வுகளுடன் விருந்தினர்களது உரைகளும் இடம்பெற்று சாதனை மாணவர்கள் விருந்தினர்களால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு நினைவுக் கேடயங்கள் வழங்கப்பட்டு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டுமதிப்பளிக்கப்பட்டனர்
நிகழ்வில் ஓய்வு நிலை கோட்டக் கல்வி அதிகாரி த.பங்கயற்செல்வன் , மாங்குளம் மகா வித்தியாலயஅதிபர் இ.கோகுலன்,துணுக்காய் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஜெ.பாலசந்திரன் ,மாங்குளம் கிராம அலுவலர் ம.சர்மிலா பனிக்கன்குள கிராம அலுவலர். யோ.துஷிகா,மாங்குள கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர். திரு.நா.ஜெயக்காந்தன்,மாங்குளம் மகா வித்தியாலய ஆசிரியர்கள்,முன்னாள் மாங்குளம் சனசமூக நிலைய தலைவர்.திரு.க.நடராசாமனிதாபிமான குழு மேம்பாட்டாளர் திரு.றூவ்ஆனந், பனிக்கன்குளம் இளந்தளிர் இலவச கல்வி நிலைய நிர்வாகி லி.ஜெயந்தினி, அறிவொளி கல்வி நிலைய ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.