மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் ஊர்தி சற்றுமுன் யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்தது. வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு ஊர்தி மூலம் ஏ9 வீதி ஊடாக மாங்குளம் - கிளிநொச்சி ஊடாக நகர்ந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
இன்று மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் நாளை திங்கட்கிழமை(04) எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள பொது அமைப்புக்கள் வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ளன.மேலும் , இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர்மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.