சிரியாவில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்கா திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் லெபனான் வரை நீண்டு விட்டது. இந்தநிலையில் இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசி ஈரான் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதனிடையே தெற்கு லெபனான் பகுதியில் அமைதி மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள ஐநா அமைதி குழுக்கள் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த ஐநா அமைதி குழுவில் இந்தியாவை சேர்ந்த 900க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வருவதால் அவர்களின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிரியாவில் செயல்படும் ஐஎஸ் தீவிரவாத குழுக்களின் முகாம்கள் மீது அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதனால் பதற்றம் உருவானது.
இந்த நிலையில் வடக்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்கதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.