காங்கேசன்துறைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் படகுச்சேவைக்கென 'சிவகங்கை' என்ற படகு ஈடுபடப்போவதாகவும், அதன் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சேவை மீண்டும் ஒரு முறை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் காங்கேசன் நாகப்பட்டினம் இடையே சேவையில் ஈடுபட்டிருந்த 'செரியாப்பாணி' படகு போல 'சிவகங்கையும்' மாறிவிடக் கூடாது என்பதாகவே மக்களின் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இப்போது ஏமாற்றமே மிச்சமாகியிருக்கின்றது.
கத்திடக் கேட்டிடும் தூரத்தில்' இருக்கும் தமிழகத்துக்குச் செல்வதற்கு மிகசுலபமானதும், பணச்செலவை மீதப்படுத்துவதுமான மார்க்கமாக கடல்மார்க்கமே சரியான தெரிவாக இருக்கமுடியும் ஆனால் சிலபல காரணங்களால் இந்தக்கடல் இணைப்பை இலங்கை இந்திய அரசாங்கங்கள் தள்ளிப்போட்டபடியே வந்தன. 'இதோ தொடங்குகின்றது, அதோ தொடங்குகின்றது' என்று ஆளையும் எழுப்பி முயலையும் எழுப்பும் அறிவிப்புகள் மட்டும் வந்துகொண்டிருந்தவே தவிர, உருப்படியான காரியங்கள் எதுவும் நடைபெறவில்லை ஒவ்வொருமுறையும் படகுப்பயணம் தள்ளிப்போவதற்கு ஏதோவொரு நொண்டிச்சாட்டுச் சொல்லப்பட்டுக்கொண்டேஇருந்தது. முறையான அனுமதி பெறப்படவில்லை, படகின் தர நிர்யணம் சோதனை செய்யப்படவில்லை, துறைமுக உட்கட்டமைப்பு வசதி போதாது என்று அந்தச் சாட்டுகள் நீண்டுகொண்டே சென்றன. ஆனாலும் சாட்டுகளைச் சொல்லிச் சமாளிக்கமுடியாத கட்டத்தில் ஒருவழியாக. "செரியாப்பாணி' என்ற படகு காங்கோனுக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடை யேதனது பயணத்தை தொடங்கியது. இந்தப் படகுப் பயணச்சேவையை இந்தியப் பிரதமர் தரேந்திரமோடி காணொளி மூலம் ஆரம்பித்து வைத்திருந்தார். இலங்கைக்கு இராமன் கல்லால் அணை கட்டியனதப்போல செரியாப்பாணி படகுச்சேவையும் இருநாடுகளையும் பொருளாதார, கலாசார, பண்பாட்டு ரீதியாக இணைக்கப்போகின்றது என்று கம்பி கட்டிய கதையெல்லாம் இந்தியப்பிரதமர் அந்த ஆரம்பலைபவக் காணொலி யில் சொல்லத் தவறவில்வை. ஆனால் அந்தப் படகுச் சேவைக்கும் சொற்ப ஆயுக போலும், சில தடவைகள் காங்கேசனுக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே உலவித் திரிந்த 'செரியாப்பாணிக்கு' மாரிமழை ஒத்துவராது என்றும், மழைக்காலம் முடிந்ததும் மீண்டும் கடலில் தடம் பதிக்கும் என்றும் சொல்லி தற்காலிகமாக அந்தச் சேவைக்கு மூடுவிழா செய்யப்பட்டது.
மாரிமழை ஓய்ந்து அடுத்தமாரியும் நெருங்கப் போகின்றது. ஆனால் செரியாப்பாணி கடலுக்குள் வரவேயில்லை. இதற்கிடையே இன்னொரு நிறுவனம், இந்தப் பட சேவையைப் பொறுப்பெடுத்தது. சில மாதங்களுக்கு முன்னர் தங்கள் சேவை ஆரம்பமாகின்றது என நாளும் குறித்தார்கள். ஆனால் படருச்சேவைக்கான பழைய சாபக்கேடு இந்த நிறுவனத்தையும் தொற்றிக்கொண்டது. புதிய படகைக் கடலில் இறக்குவதிலும் ஏதேதோ தடங்கல்கள். அதனால் தடைப்பட்டு, தடைப்பட்டு, ஒரு வழியாக சிவகங்கை என்ற படருதன் வெள்ளோட்டத்தை முடித்து, பயணிகள் சேவைக்கு தயாராகியிருந்தது. இவ்வாறான பின்னணியிலேயே சிவகங்கையும் தள்ளிப் போயிருக்கிறது.
சிக்கல் என்னவெனில், சிவகங்கையில் பயணம் பிற்போடப்பட்டமை தற்காலிகமானதா? அல்லது தற்காலிகம் என்ற போர்வையில் செய்யப்படவுள்ள இழுத்தடிப்பு நாடகமா? என்பதே. ஏனெனில் செரியாப்பாணியை ஒத்த அதே வசதிகளுடன் தான் சிவகங்கையும் உள்ளதால். அடுத்தடுத்த மாதங்களில் ஆரம்பமாகப்போகும் மாரி காலத்துக்கு இந்தப் படகுச் சேவையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம்.
படகுச்சேவை மூலம் தமிழகத்துக்கும், வடக்குக்கும் இடையிலான கடல்பாதை இறுக்கமடைந்தால் பல நன்மைகள் விளையும். வடக்குக்கு மட்டுமல்லாது. தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் நன்மைகள் அதிக முண்டு அதை மனதில் கொள்லவேண்டியது அனை வரினதும் பொறுப்பு.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.