[புதியவன்]
தமிழ் சினிமாவில் சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராக வந்து நடிகராக ஜொலிப்பவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் நகைச்சுவைப் படங்கள் நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார். இவரது ‘அமரன்’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தனது 23வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது. தற்போது படத்தின் வில்லனை பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரபல ஹிந்தி நடிகர் வித்யூத் ஜமால்தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.
அதன்பிறகு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவின் நண்பராகவும் நடித்திருந்தார். நீண்ட காலமாக தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்தவர் தற்போது சிவகார்த்திகேயன் படம் மூலம் தமிழில் வில்லனாக மீண்டும் வருகிறார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.