தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக வொஷிங்டன் குறைத்துள்ளது.
ஆசிய – பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் இடையில், டொனால்ட் ட்ரம்ப்பும் சீ ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்புக்குப் பின்பு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், எங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது என்றதோடு, ஃபெண்டானில் வலிகளைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து உற்பத்தியைத் குறைக்க சீ ஜின்பிங் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.”ஃபெண்டானில் நிலைமையை கவனித்துக் கொள்வதாக சீனா உறுதி அளித்திருக்கிறது.
அவர்கள் உண்மையிலேயே வலுவான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என நான் நம்புகிறேன். எனவே, சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாகக் குறைத்துள்ளேன். இனி, சீன பொருட்களுக்கான ஒட்டுமொத்த இறக்குமதி வரி 47 சதவீதமாக இருக்கும். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது ஓராண்டு ஒப்பந்தம் எனவும், இந்த ஒப்பந்தம் மேலும் தொடரும் என நம்புகிறேன். ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பாக நாங்கள் மீண்டும் சந்தித்து இது குறித்து கலந்துரையாடுவோம்.நான் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்வேன். அதன் பிறகு சீன அதிபர் சீ ஜின்பிங் அமெரிக்கா வருவார். சீனா உடனான அரிய புவி கனிய மணல்கள் குறித்த பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது.
அது உலகத்துக்கானது. தாய்வான் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. உக்ரைன் குறித்து நாங்கள் அதிகம் விவாதித்தோம். இதில், ஏதாவது முடிவு எட்டப்படுமா என்பது குறித்து நாங்கள் இணைந்து செயல்படப் போகிறோம். சீ ஜின்பிங் எங்களுக்கு உதவப் போகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.