சுதுமலை அருள்மிகு ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தான மஹோற்சவத் திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மு.ப 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 தினங்கள் நடைபெறவுள்ளன.
அடுத்தமாதம் 3 ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும், 7 ஆம் திகதி வேட்டைத்திருவிழாவும், 9 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழாவும், 11 ஆம் திகதி புதன்கிழமை தீர்த்தத் திருவிழாவும், 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பூங்காவனத் திருவிழாவும் நடைபெறும். முதலாம் திருவிழா தொடக்கம் 16 ஆம் திருவிழா வரை உதயகாலை பூஜை தினமும் காலை 5.30 மணிக்கு இடம்பெறும். திருவிழாக் காலங்களில் காலை 6 மணி முதல் 7 மணி வரை வேத பாராயணமும், அபிராமி அந்தாதியும் ஓதப்படும். அடியார்கள் தங்களால் இயன்ற சிவத்திரவியங்களைத் தந்துதவி அம்பாளை வழிபட்டு அருள்பெற்றுய்யுமாறு ஆலய தர்மகர்த்தா அறிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.