முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளதாக மக்கள் பீதியடைந்த சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள் பாெருத்தப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து இன்று மாலை திடீரென ஒலி எழுந்துள்ளது. அதனைகேட்ட கடற்கரையை அண்மித்த மக்கள் சுனாமி வருகின்றதோ என அச்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்துஇ அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்' வட்டுவாகல் கடற்படை தளத்தில் ஒத்திகை பயிற்சி செய்வதாகவும் அதனாலேயே ஒலி எழுந்ததாகவும் மக்கள் சுனாமி குறித்து அச்சம் தேவையில்லை எனவும் ஏதாவது அனர்த்தம் இடம்பெறும் சாத்திய கூறுகள் இருந்தால் தாம் முற்கூட்டியே அறிவுறுத்தல் வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.