முல்லைத்தீவு - குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய இன்றைய பொங்கல் நிகழ்வு சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.
குருந்தூர்மலையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதன் அடிப்படையில், 3 பேருந்துகள், 2 இராணுவ ரக் வாகனங்களில் நூற்றுக்கணக்கான பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தமிழ் மக்களும் பொங்கல் நிகழ்விற்காக வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது என காவல்துறையினரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.