அரியாலை - செம்மணிப் புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் ட்ரக் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 60ஆவது அமர்வு நேற்று ஆரம்பமானது. இதன்போது, இலங்கை தொடர்பில் தனது வாய்மொழி அறிக்கையை முன்வைக்கும் போதே செம்மணிப் புதைகுழிக்கும் சர்வதேச விசாரணை அவசியம் என்று ஆணையாளர் வோல்கர் ட்ரக் வலியுறுத்தினார்.
செம்மணிப் புதைகுழி குறித்த அறிக்கையிடலை ஆணையாளர் செய்தபோது செம்மணி என்ற பதத்தை சரியாக உச்சரிப்பதில் அவர் ஆரம்பத்தில் சிரமப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.