கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 32 போ் உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
தலைநகா் மொகடிஷுவிலுள்ள கடற்கரை ஹோட்டலான லிடோ பீச்சுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த பயங்கரவாதி, தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா்.
அதனைத் தொடா்ந்து கூட்டத்தினா் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 32 போ் உயிரிழந்தனா்; 63 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் ஒருவா் பாதுகாப்புப் படை வீரா். இந்தத் தாக்குதலில் மேலும் ஒரு வீரா் காயமடைந்தாா் என்று போலீஸாா் கூறினா்.
இந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தாவின் கிழக்கு ஆப்பிரிக்க துணை பயங்கரவாத அமைப்பான அல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் வானொலியில், அல்-ஷபாப் உறுப்பினா்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலுக்குள்ளான லிடே பீச் ஹோட்டல் ஏற்கெனவே பல முறை தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது.
கடந்த ஆண்டு அங்கு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனா்.வார விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை இரவு அந்த ஹோட்டலில் கூட்டம் அதிகமாக இருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.