ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து கலந்துரையாடினார்.
அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) சுகீஷ்வர குணரத்ன மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.