ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளுடன் தங்களின் அண்டை நாடான உக்ரைன் சேருவதை எதிர்த்து ரஷியா அந்நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது.
3 ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில் இரண்டு பக்கங்களிலும் உயிர்சேதங்களும், மக்கள் இடப்பெயர்வும் நிகழ்ந்துள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும், ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் உதவி செய்து வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் மீது தொடுத்த போரை கண்டிக்கும் விதமாக ரஷிய ஜனாதிபதி புதினை விமர்சித்த ரஷிய பாடகர் தனது வீட்டின் ஜன்னல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
ரஷிய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பொலிஸ் விசாரணையின் போது ஜன்னலில் இருந்து கீழே விழுந்த அவர் உயிரிழந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் ராணுவத்திற்கு நன்கொடை அளித்ததாகவும், அதிபர் விளாடிமிர் புதினை 'முட்டாள்' என்று அழைத்ததாகவும் அதிகாரிகள் அவரை விசாரித்து வந்தனர்.
மேலும் உக்ரைன் ராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கையின்படி, அவரது வீட்டில் பொலிஸ் சோதனையின்போது தண்ணீருக்காக சமையலறைக்குச் சென்றதாகவும், பின்னர் ஜன்னலை திறந்து கீழே குதித்ததாகவும் கூறப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.