டுவிட்டர் தளத்தில் ஓடியோ மற்றும் வீடியோ வசதியானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்துஅதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார். அந்தவகையில் கடந்த ஜூலை 24ஆம் திகதி டுவிட்டர் நிறுவனத்தின் புகழ் பெற்ற நீல நிற குருவியின் லோகோவை மாற்றி கறுப்பு – வெள்ளை நிறத்தில் எக்ஸ் இஸ் லைவ்” என்ற புதிய லோகோவுடன் டுவிட்டர் தலைமையகத்தின் புகைப்படத்தை இணைத்து எலான் மஸ்க் வெளியிட்டார்.
இந்த மாற்றம் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்நிலையில், டுவிட்டர் தளத்தில் ஓடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும், இந்த புதிய வசதிக்கு தொலைபேசி எண்கள் தேவையில்லை என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார். அத்துடன் அண்ட்ரொய்ட் அப்பிள் உட்பட அனைத்து இயங்கு தளங்களிலும் இது செயற்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.