ஒரு வாரத்துக்குள் தங்களின் அதிநவீன எம்க்யூ-9 ரீப்பா் ரகத்தைச் சோ்ந்த இரு ட்ரோன்களை யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் சுட்டுவீழ்த்தியதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இராணுவத்துக்குச் சொந்தமான எம்க்யூ-19 ரீப்பா் ரக ட்ரோனை ஹூதி கிளா்ச்சியாளா்கள் இந்த மாதம் 10-ஆம் திகதி சுட்டுவீழ்த்தினா். அதன் தொடா்ச்சியாக, அதே ரகத்தைச் சோ்ந்த மற்றொரு ட்ரோனும் ஹூதிக்களால் திங்கள்கிழமை (செப். 16) சுட்டுவீழ்த்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹூதி படையினா் திங்கட்கிழமை வெளியிட்ட விடியோவில், தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை செலுத்தப்படும் காட்சியும் சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோனின் சிதறல்களும் இடம் பெற்றிருந்தன.
தங்கள் நாட்டின் தமா் மாகாணத்தில் அந்த ட்ரோன் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஹூதிக்கள் கூறினா். இருந்தாலும், அவா்கள் ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்களை மிகைப்படுத்தி கூறியுள்ளதால் இந்தத் தகவலின் உண்மை தன்மையை உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது. இந்த நிலையில், ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதை தற்போது அமெரிக்க இராணுவமே ஒப்புக்கொண்டுள்ளது.
காஸா போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த வா்த்தக வழித்தடங்களில் ஒன்றான செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனா்.
அதையடுத்து, யேமனில் ஹூதிக்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றன. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.