தமிழரசு மீதான வழக்கு;
தமிழரசு மீதான வழக்கு;

எதிராளிகள் பொதுநிலைப்பாடு; விரைவில் இணக்கப்பாடு!

(ஆதவன்)


தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில்எதிராளிகள் அனைவரும் ஒருநிலைப்பாடாக பொது முடிவெடுத்து, அதனை வழக்காளிக்கான பதிலாக வழங்கி, வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்-இவ்வாறு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் முடிவுற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். "நேற்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சி மீதான வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பான விளக்கம் அனவருக்கும் வழங்கப்பட்டது.

கடந்த தவணையில் எதிராளிகளாக பெயரிடப்பட்ட ஏழுபேருடன் கிளிநொச்சியைச் சேர்ந்த ஜீவராஜா தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு விண்ணப் செய்திருந்தார். அவரது விண்ணப்பம் தொடர்பாக ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிப்பதற்காக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் யோகேஸ்வரன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அவகாசம் வழங்குமாறு தவணை கேட்டிருந்தார். நானும் அப்படி அவகாசம் கேட்டிருந்தேன். அதனையடுத்து எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதிக்கு வழக்கு அழைக்கப்படவுள்ளது.

கடந்த தவணைக்கு முன்பாக கட்சியின் மத்தியசெயற்குழு எடுத்த தீர்மானத்துக்கமைய வழக்கை முடிவுறுத்திக்கொள்வது தொடர்பாக நீதிமன்றிலே நான் கூறியிருக்கின்றேன். எதிராளிகளின் ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி தன்னுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காகவே கடந்த தவணை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதுபோன்ற சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் போது அதில் பல படிமுறைகள் உள்ளன. அவற்றைக் கடந்த பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சாதாரணமாக இவ்வாறான வழக்கில் ஒரு வருடத்துக்குப் பின்னரே முதலாவது விளக்கத்துக்கான திகதி குறிக்கப்படும். ஆனால், இந்த வழக்கை விரைவில் முடிவுறுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக நாங்கள் குறுகிய தினத்தைக் கேட்டிருக்கின்றோம். இந்த வழக்கில் எதிராளிகள் ஏழு பேரினதும் ஆட்சேபனைகளின் அடிப்படையில் மூன்று வித்தியாசமான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக நானும், கட்சியின் பொதுச்செயலாளர் சத்தியலிங்கமும், நிர்வாகச் செயலாளர் குலநாயகமும் ஒரு நிலைப்பாட்டையும். மாவை சேனாதிராசா, யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு நிலைப்பாட்டையும், சிறீதரன், குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும் எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் கட்சி ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்காத சூழ்நிலையில் நாங்கள் எப்படி எமது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்துவது? என்று வழக்காளி கேள்வி எழுப்பியிருந்தார்.


இருப்பினும் கட்சி தற்போது ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்கி தெரிவுகளை மீள நடத்துவதற்கு இணங்குவதாக ஏற்கனவே சிறீதரன் கூறியிருந்தார்.  அதனை நீதிமன்றிலே நான் சொல்லிருக்கின்றேன்.

இப்போது நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்துள்ள காரணத்தினால் நாங்கள் ஏழுபேரும், எட்டாவது எதிராளியான ரத்தின வடிவேலும் இணைந்து, வழக்கிலே எமது பதிலை ஒரு நிலைப்பாடாக பதிவு செய்து, வழக்காளியோடு இணக்கப்பாட்டுக்கு வருகிறோம் என்று கூறி வழக்கை முடிவுறுத்துவதற்கு தற் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதற்காக வழக்காளியின் சட்டத்தரணி யோடு நான் பேசியிருக்கின்றேன். ஏனையவர்களின் சட்டத்தரணிகளுடன் பேசி பொது நிலைப்பாட்டுக்கு இணங்கிக் கொள்வதுடன், எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வவுனியாவில் மத்தியகுழு மீண்டும் கூடி, அந்தப்பதிலின் வரைவை மத்தியசெயற்குழுவுக்குச் சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என முடிவு செய்துள்ளோம். அந்தப் பொது நிலைப்பாட்டை அடுத்த தவணையில் நீதிமன்றில் சமர்ப்பித்து அதன் பின்னர் இணக்கப்பாட்டைச் செய்யலாம் என்று தீர்மானித்திருக்கின்றோம்" என சுமந்திரன் கூறினார். (ச)

#vavuniya_news

126 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.