தமிழர்களின் பூர்வீக காணிகள் அபகரிப்பு - ரவிகரன் குற்றச்சாட்டு
தமிழர்களின் பூர்வீக காணிகள் அபகரிப்பு - ரவிகரன் குற்றச்சாட்டு


(புதியவன்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலி ஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரித்து 4ஆயிரத்து 238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3 ஆயிரத்து 389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்தாவது,
வடமாகாணத்தில் 2 ஆயிரத்து 415 சதுர கிலோமீற்றர் நிலப் பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்.  5 இலட்சத்து தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3ஆயிரத்து 389 குடும்பங்களுக்கு காணி இல்லை.ஏற்கனவே விடுதலைபுலிகள் மௌனிக்கப்பட்ட காலங்களுக்கு பின் பூர்விகமான மணலாறு என்ற இடம் வெலி ஓயாவாக மாற்றம் செய்து 4 ஆயிரத்து 238 சிங்கள  குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வீட்டு வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 ஆயிரத்து  455 மொத்த குடும்பங்களும் காணப்படுகின்றன. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4 ஆயிரத்து557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த 12 ஆயிரத்து545 பேரும் முஸ்லீம் மக்களாக 1ஆயிரத்து675 குடும்பங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 382 பேரும் தமிழ் மக்களாக 41 ஆயிரத்து 210 குடும்பங்களை சேர்ந்த 1அலட்சத்து 21ஆயிரத்து 799 பேர் காணப்படுகிறார்கள். 

 தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4 ஆயிரத்து 557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதில் ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம், ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும் குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் கொக்குளாய் கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள்.

இது தவிர 2022 ஆம் ஆண்டுகளில் 28 ஆயிரத்து 676 இளைஞர் இளம் பெண்கள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்த ஒரு நடவடிக்கை இருக்கின்றது.

அரசாங்கமே விண்ணப்பிக்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்று வரைக்கும் அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என்றார். (ஞ)

212 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.