தமிழ் பொது வேட்பாளர் விடயமானது சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் இருப்பை காட்டுகின்ற ஒரு முயற்சி என ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச அணியின் முக்கிய பெண் பிரமுகரான உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் தமது வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கே அளிக்கலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொது வேட்பாளர் என்பது தமிழ் மக்களின் ஒரு அடையாளம். இதனடிப்படி அந்த பொது வேட்பாளரை தெரிவு செய்யும் உங்களது உரிமைக்கு நாங்கள் மதிப்பளிப்பது அதனை கௌரவப்படுத்துகின்றோம். அதேவேளை நாட்டின் புதிய மாற்றத்திற்காக உங்களது இரண்டாவது வாக்கினை சஜித் பிரேமதாசவிற்கு அளியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.