நவீன தொழில்நுட்ப காலாதிக்கமான இன்றைய காலத்தில் வன்முறைகள் என்பன நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. பெண்களுக்கெதிரான வன்முறை அடக்கு முறை என்பவை விடை காணமுடியாத கேள்விகளாகவே தொடர்ந்து கொண்டு செல்கின்றன.மகாகவி பாரதி பெண் அடிமைத்தனத்தை நீக்கியிருந்தாலும் அது இன்னும் குறைந்தபாடில்லை. இன்றைக்கும் சில ஆண்கள் பெண்களை கைப்பொம்மை போல செயற்படுத்துவதை காணமுடிகிறது. நாட்டில் நிலையாக வாழ்ந்த சமூகமானது போரினால் புலம்பெயர்ந்தும், வேலைவாய்பைத் தேடியும், பொருளாதாரத்தை இழந்து வறுமைக்கோட்டுக்கு தள்ளப்பட்ட சூழல்களும் உருவானமையால் கலாசார் ஒழுக்க விழுமியங்களை பேணிக்காக்க முடியாத நிலைதோன்றியுள்ளது. வாழ்வின் குழப்ப நிலையின் பின்புலத்தில் எமது சமுதாயத்தில் பெண்ணுரிமை பற்றி ஆராய்தல் பொருத்தமானதாகும்.
எமது தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரையில் பெண்ணின் பங்களிப்பு என்பது கல்வி கேள்விசார் விடயத்துடன் வளர்ச்சியடைந்திருப்பதுடன் உயர்நிலைப் பதவிகளையும் வகித்து சமுதாயத்தை நெறிப்படுத்தும் வாய்ப்பை ஓரளவு வழங்கியுள்ளது என்பதை ஏற்கத்தான் வேண்டும். ஆனால், பெண்கள் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் இடர்பாடுகளை சந்திக்கும் இடமாகவும் எமது சமுதாயம் மாறியுள்ளது என்றால் அதை மறுப்பதற்கில்லை.
அர்த்தமுள்ள வாழ்க்கை நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுகவேண்டிய அரசியல் பற்றிய தெளிவூட்டல்களுக்கு அப்பால், சுயநலத் தேவைப்பாட்டுடன் சமூகக் கட்டமைப்பாக மாற்றம் பெற்றுள்ளமை அதன் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை தொடரமுடியாத வகையில் ஒரு தெளிவற்ற போக்கை கொண்டுள்ளது. இதேவேளை பூகோளமய மாக்கலின் விளைவால் அறிமுகமான நவீன தொடர்பாடல் சாதனங்களான கைத்தொலைப்பேசி, தொலைக்காட்சி போன்றவற்றால் தோன்றும் தனி மனிதப் பிரச்சினை கள் காலப்போக்கில் சமூகப் பிரச்சினைகளாக திரிபடை கின்றன. வணிக இலாபத்தை நோக்காகக் கொண்டு காம எண்ணங்களை தூண்டக்கூடிய வகையில் வெளிவிடப்படும் ஆபாச திரைப்படக் குப்பைகளால் ஒழுக்கச் சீர்கேடுகள் அதிகரிக்கின்றன. அதன் உச்சக்கட்டமாக பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதனால் கொலைகளும், தற்கொலைகளும் சம்பவிக்கின்றன. மேலும் பல பெண்களின் வாழ்வு தவறான பாதையை தெரிவுசெய்து பயணிக்கிறது. வன்முறைகளுக்கு பல குடும்பச்சூழலும் காரணமாகின்றன. பெண்கள் அடிமைப்பட்டு வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தந்தை மகளையும், சகோதரன் சகோதரியையும் வன்புணர்வுக்குட்படுத்தும் அருவருக்கத்தக்க கேவலமான விடயங்களும் நடைபெற்ற வண்ணமுள்ளன.
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் வாழ்வாதார தேவைக்காக பெண்களும் உழைக்கவேண்டியுள்ளது. இருப்பினும் சில தொழில் ஸ்தாபனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. எங்கு தான் பெண்கள் சுதந்திரமாகச் செயற்படுவது? என்றுதான் பெண் வன்கொடுமைகளுக்கு முடிவு வரப்போகிறது? விஷம எண்ணங்களும், வக்கிர புத்தியும் மேலோங்கம் போது அந்தச் சமூகம் நலிவடைவது நிச்சயம். 'எந்த சமுதாயத்தில் பெண்கள் மதிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்களோ? அந்தச் சமுதாயம் வளர்ந்து உச்ச நிலையை அடையும்' என சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுவதிலிருந்து பெண்மையின் முக்கியத்துவத்தை உணரலாம்.
நவீன விஞ்ஞான உலகின் வளர்சிக்கு மட்டுமல்லாது நமது அன்றாட வாழ்வுக்கும் ஆற்றல் உதவுகிறது. ஆற்றலை மேம்படுத்தும் சக்தியே பெண். இதனால் தான் பெண்மையிலிருந்து வரும் தாய்மை போற்றப்படுகிறது. அத்தகைய தாய்மை எனும் புனிதத்துவம் நிறைந்த பெண்ணினத்தின் மீதான வன்முறைகளைத் தடுத்து, உரிமைகளை வழங்கி, நம்பிக்கையைக் கொடுத்து அவர்களின்
கௌசிகா ஜெகதீஸ்வரன்
ஊடக கற்கைகள் துறை
யாழ்.பல்கலைக்கழகம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.