முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய வசதிகளை திருகோணமலை பட்டணம் சூழலும் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதோடு ஏனைய அரச திணைக்களங்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகளுடன் படகொன்று நேற்று கரை ஒதுங்கியிருந் நிலையில் குறித்த படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளதாகவும், குறித்த படகில் 35 சிறுவர்களும் ஒரு கற்பிணியும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.