மத்திய தரைக்கடலை கடக்க முயற்சித்த இரு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 ஆப்பிரிக்க குடியேறியவர்களின் உடல்களை துனிசியாவின் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை (02) தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடிக்கடி பயன்படுத்தும் புறப்படும் இடமான துனிஷியாவின் ஸ்ஃபாக்ஸ் (Sfax) நகருக்கு அப்பால் படகுகள் நீரில் மூழ்கியுள்ளன.
எனினும், இரண்டு படகுகளில் பயணித்த 87 பேரை கடலோர காவல்படையினர் காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னெப்போதும் இல்லாத இடப்பெயர்வு நெருக்கடியால் துனிசியா பாதிக்கப்பட்டுள்ளது.
துனிசியர்கள் மற்றும் ஐரோப்பாவில் வாழ விரும்பும் மக்களுக்கு இது இப்போது முக்கிய புறப்படும் இடமாக ஸ்ஃபாக்ஸ் மாறியுள்ளது.
கடந்த மாதம், துனிசியாவின் கடலோரக் காவல்படை இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் சுமார் 30 புலம்பெயர்ந்தோரின் உடல்களை மீட்டெடுத்தது.
அவர்கள் ஐரோப்பாவை நோக்கிச் படகுகளில் பயணித்தவர்கள் ஆவர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.