இன்றைய சமூகத்தில் ஓரளவு பின்தங்கியிருக்கும் மரபுகளை வெளிப்படுத்தும் சமூக நோக்கத்துடனும், முழு உலகிற்கும் தேசிய ஒற்றுமையை நிரூபிக்கும் நோக்கத்துடனும் இந்த ஆண்டு தேசிய ரமழான் பண்டிகையை “சலாம் ரமழான்” என்ற தொனிப் பொருளில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
2025 மார்ச் 21 முதல் 31 வரை கலாச்சார விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேல் மாகாண சபையால் நியமிக்கப்பட்ட தேசிய ரமழான் விழாக் குழு இதனை திட்டமிட்டுள்ளதுடன், 2025 மார்ச் 21 முதல் 31 வரை 10 நாட்களுக்கு கொழும்பு நகரத்தை மின் விளக்குகளால் ஒளிரச் செய்யவும், இந்த தேசிய விழாவுடன் இணைந்து கிரீன் பாத் வளாகத்தில் மூன்று நாள் கலாச்சார விழாவை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் மற்றொரு பண்டிகையாக ‘சலாம் ரமழான்’ விழாவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சலாம் ரமழான்’ விழா, முஸ்லிம் மக்களின் பல்வேறு பாரம்பரிய மற்றும் கலாச்சார விழுமியங்கள் பற்றிய அடிப்படை புரிதலையும் அறிவையும் மேம்படுத்தும் ஒரு தனித்துவமான விழாவாகும்.
இந்த விழாவின் மூலம், ஏனைய கலாச்சார விழாக்கள் கொண்டாடப்படுவது போன்று, முழு சமூகத்தையும் மத ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஒன்றிணைத்து, அதிக சமூக பங்கேற்பு, பொருளாதார பங்கேற்பு மற்றும் மதங்களுக்கு இடையேயான புரிதலுடன் கொண்டாட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வைப் பற்றி கருத்து வெளியிட்ட தேசிய ரமழான் விழாக் குழுவின் தலைவர் ரிசான் நசீர், ரமழான் மாதம் என்பது வெறுமனே ஒரு மாதம் மட்டுமல்ல, அது எமது பாரம்பரிய கலாச்சார நெறிமுறைகள், உணவு பழக்கவழக்கங்கள் பற்றிய பல விடயங்கள் உள்ளடங்கியுள்ள மையினால், இதை நாம் சமூகத்தின் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், உலகெங்கிலும் வாழும் Moors,Memons, Malays மற்றும் Dawoodi Bohras போன்ற முஸ்லிம் கலாச்சாரங்கள் தொடர்பான பல விடயங்களைப் பற்றிய அறிவை சமூகத்திற்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று சுட்டிக்காட்டினார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.