உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் இன்று கட்டுபணம் செலுத்தினார்.
இதன் போது அர்ச்சுனா எம்பி கருத்து தெரிவிக்கையில்..
வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் சுயேட்சை குழுவாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதற்கபைய யாழிலுள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கு முதற்கட்டமாக கட்டுப்பணத்தை செலுத்தி இருக்கிறோம்.
ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்துவதற்கு எம்மிடம் போதிய நிதி இல்லாததால் போட்டியிடும் வேட்பாளர்களிடமே அதற்கான நிதியை வழங்குமாறு கூட கேட்டிருக்கிறோம்.
அவ்வாறு அவர்கள் வழங்குமிடத்தே அந்த நிதியை நாம் மீண்டும் அவர்களிடம் கிடைக்கும் என்பதையும் அவர்களுக்கு தெரிவித்தும் இருக்கிறோம். எமக்காண பணம் வந்த பின்னர் அந்த நிதியை நிச்சயம் அவர்களிடமே வழங்குவோம்.
இதனடிப்படையில் வடக்கு கிழக்கு முழுவதும் உள்ள சபைகளுக்கு தொடர்ந்தும் நாம் கட்டுப் பணத்தை செலுத்த உள்ளோம். இவ்வாறு அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணத்தை செலுத்தி சகல இடங்களிலும் தேர்தலில் போட்டியிடுவோம்.
இதேவேளை யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக எனது செயலாளர் சட்டத்தரணி கௌசல்யாவை நிறுத்த உள்ளோம். எங்களிடம் ஒழித்து மறைக்கும் எண்ணங்களோ சிந்தனையோ இல்லை.
ஆகவே வடகிழக்கில் சகல சபைகளிஙும் நாம் போட்டியிடுகிற போது தமது முழுமையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும். அவ்வாறாக மக்கள் தமது ஆதரவை எமக்கு வழங்குவார்கள் எனவும் எதிர்பார்ப்க்கிறோம் என்றார். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.