செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை ஒரே மேடையில் விவாதிக்க வைக்கும் முயற்சியில், தேர்தல் கண்காணிப்பு அமைப்பான "பன்ரல்' அமைப்பு ஈடுபட்டிருக்கின்றது. இந்த விவாதத்தில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ், அநுரகுமார திஸாநாயக்க, அரியநேத்திரன், தினித் ஜெயவீர. நாமல் ராஜபக்ச ஆகியோரை பங்கெடுக்க வைக்க முயல்கின்றது 'பவ்ரல்' அமைப்பு. இப்படியான விவாதங்கள் ஆசிய நாடுகளில் இதுவரை நடந்த தில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகளிலேயே இப்படியான விவாதங்கள் சாத்தியமாகியிருக்கின்றன. 'பன்ரல்' அமைப்பின் முயற்சி வெற்றிபெற்றால். இப்படியான விவாதம் நடத்தப்பட்ட முதல் ஆசிய நாடு என்ற பெயரை இலங்கை பெறும், ஆனால் அது சாத்தியமாவதற்குரிய சந்தர்ப்பம் ஒரு வீதமளவில் கூட இல்லை என்பதுதான் உண்மை சில மாதங்களுக்கு முன்னர், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் நேரடி விவாதத்துக்குத் தயார் என்று அறிவித்திருந்தனர். அந்த விவாதத்துக்குப் பல தடவைகள் திகதிகள் அறிவிக்கப்பட்டபோதும், தற்போதுவரை அவர்கள் தேருக்கு நேர் சந்தித்து விவாதிக்கவில்லை. பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு அந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மறக்கப்பட்டிருந்தது.
நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் என்னதான் மேடைகளில் தாங்கள் தான் மீட்பர்கள் என்பது போல முழங்கினாலும், அடுத்தவர்களை நோக்கிச் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், மக்களைப் பொறுத்தவரையில் அடிப்படையில் அனைவரும் ஒரே குட்டைக்குள் ஊறிய மட்டைகளே நாட் டில் உள்ள அரசியல்வாதிகளில் எவரும், கறை படியாத சுரங்களைக் கொண்டவர்கள் அல்லர். மக்கள் முன்பாக முஷ்டியை முறுக்கி மோதிக்கொள்ளும் இவர்கள், மாட்டு வேலைகளில் ஒன்றாகவே இருக்கின்றனர். அதனாலேயே எவர் ஆட்சிக்கு வந்தாலும் எந்த மேசடிகளும் அம்பலத்துக்கு வராது மூடி மறைக்கப்படுகின்றன. இவை மக்கள் அறியாததல்ல, ஆனால் வேறு வழியின்றி ஒப்பீட்டு அளவிலேயே அரசியல் தலைவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படு கின்றனர். இது பதவிக்கு வரும் அரசியல் தலைவர்களுக்கும் தெரியாத ஒன்றல்ல.
நிலை இவ்வாறிருக்க, பொது மேடையில் நேரடி விவாதம் என்பது சாத்தியமற்றது என்பது சிறு குழத்தைக்குக்கூடப் புரியும் மடியில் கணமிருக்கும்போது அரசியல் தலைவர்கள் பொது மேடையில் ஒன்றாக விவாதிப்பதற்கு ஒருபோதும் தயாராக இருக்க மாட்டார்கள். தங்கள் பொட்டுக்கேடுகள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சம் அவர்களை ஒருபோதும் இவ்வாறான விவாதத்துக்குச் செல்லவிடாது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகளில் இவ்வாறான விவாதங்கள் சாத்தியமாவதற்கு, அங்குள்ள நாகரீகமான அரசியலே முதன்மைக் காரணம், சிறு தவறுகளுக்குக் கூடப் பொறுப்பேற்று தங்கள் பதவிகளை விட்டு விலகிச் செல்லும் அரசியல் பண்பாடு அந்நாடுகளில் இன்றும் இருக்கின்றது. தனது முதுமை, நாட்டை ஆள்வதற்கு தடையாக இருக்கும் என்பதை உணர்ந்து தான், ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தும் அதை உதறினார். இங்கென்றால் அப்படியெல்லாம் நடக்குமென கனவு கூடக் காணமுடியாது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாது இப்போதும் பதவிகளைத் தொங்கிப்பிடித்திருக்கும் அரசியல் கலாசாரம் நீடிக்கும் இலங்கையில் இவ்வாறான கனவான் தலமான, ஆரோக்கியமான விவாதங்கள் நடக்க இன்னும் பல்லாண்டுகள் ஆகும் என்பதுதான் வேதனையான உண்மை.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.