12th fail படத்தின் மூலம் பிரபலமடைந்த ஹிந்தி நடிகரான விக்ராந்த் மாஸ்ஸி, 2025ல் படங்களில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருக்கிறார். இந்த தகவலை அவர் சமூக வலைதள பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி வெளியானவுடன் விக்ராந்தின் ரசிகர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். “இது வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரமாக உணர்கிறேன்” என வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார்.
இன்னும் 2 படங்களே நடிக்க இருப்பதாகவும் கூறிய அவர், நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணத்தை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் அவரது அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிடைந்துள்ளனர்.
சமீபத்தில், அவர் நடித்த ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பாராட்டினர். விக்ராந்த் மாஸ்ஸி 2013 ஆம் ஆண்டு ‘லூட்டேரா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு, ‘தில் தடக்னே தோ’, ‘சபாக்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
ஆனால், ’12th fail’ திரைப்படம் அவரது கேரியரில் மிகப்பெரிய படமாக அமைந்தது. மேலும் இந்தப் படத்தில் அவர் ஐபிஎஸ் மனோஜ் குமாராக நடித்திருந்தார். இப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.