இந்தியாவின ஆந்திரப் பிரதேசத்தில் மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) ஊழியராக இருந்தவர் 37 வயதான சந்திர கிஷோர். இவருக்கு ஏழு மற்றும் ஆறு வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி இரவு 10 மணியளவில் அவர்களை தண்ணீர் நிறைந்த வாளியில் மூழ்கடித்து கொன்றார்.
இதன் பின்னர் அவர் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற அவரது மனைவி அறைக்கதவை திறந்தபோது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் மயக்கமடைந்த நிலையிலும் இருப்பதைக் கண்டார்.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கையில்,
சந்திர கிஷோர் தனது மகன்கள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றால், எதிர்காலத்தில் அவர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்றும், இந்த போட்டி உலகில் பின்தங்கிவிடுவார்கள் என்றும் தொடர்ந்து பயந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மன அழுத்தத்தால், அவர் இவ்வளவு இறுதியில் இந்த முடிவை எடுத்துள்ளார். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.