'அலங்காரக் கந்தன்' எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் குரோதி வருட மஹோற்சவப் பெருந் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்தும் இருபத்தைந்து தினங்கள் மஹோற்சவப் பெருந் திருவிழா காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறும். எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மஞ்சத் திருவிழாவும், 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அருணகிரிநாதர் உற்சவமும், 26ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கார்த்திகை உற்சவமும், 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை சூர்யோற்சவமும், 28 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணியளவில் சந்தான கோபாலர் உற்சவமும், அன்றைய தினம் மாலை 5 மணியளவில் கைலாச வாகனத் திருவிழாவும், 29 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணியளவில் கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் மாலை 5 மணியளவில் வேல் விமானம் (தங்கரதம்) உற்சவமும், 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் தண்டாயுதபாணி உற்சவமும், அன்றைய தினம் மாலை 5 மணியளவில் ஒருமுகத் திருவிழாவும், 31 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சப்பரத் திருவிழாவும், அடுத்த மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் தேர்த் திருவிழாவும், 2ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை கொடியிறக்க உற்சவமும், 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் 4ஆம் திகதி புதன்கிழமை மாலை 5 மணியளவில் வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளன. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.