'அலங்காரக் கந்தன்’ எனப்போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை மிகவும் பக்திபூர்வமாக நடைபெறுகின்றது.
இன்று காலை 6 மணியளவில் காலைச் சந்திப்பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து காலை 6.15 மணியளவில் வசந்தமண்டபப் பூசை மற்றும் கொடித்தம்பப் பூசை வழிபாடுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து நல்லூர்க்கந்தன் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமான் உள்வீதியில் திருநடனத்துடன் எழுந்தருளி உலாவந்ததையடுத்து காலை 7 மணியளவில் ஆறுமுகப்பெருமான் அழகிய சித்திரத்தேரில் ஆரோகணம் செய்து அடியவர்களின் அரோகராக் கோஷ முழக்கங்களுக்கு மத்தியில் ஆலயத்தின் பெருவீதியில் பவனிவருகின்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.