[புதியவன்]
கோவிலுக்குச் செல்லும் பலருக்கும் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதில் பல குழப்பங்கள் இருக்கும்.
பொதுவாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களையும் இடம் இருந்து வலமாக சுற்ற வேண்டும் எனவும் ராகுவையும் கேதுவையும் வலம் இருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு.ஆனால் இது தவறான முறையாகும்.
ஒவ்வொருவருக்கும் பூர்வ புண்ணியத்தின் படி தான் உங்கள் ஜாதகத்தில் கிரக நிலை அமைந்திருக்கும். அனைத்து ஜாதகத்திலும் கிரகநிலை சாதகமாக அமைந்திருக்காது. இதன் விளைவாக தோஷங்கள் ஏற்படுகிறது, அதை நிவர்த்தி செய்ய மக்கள் கோவிலை நாடி செல்கின்றனர்.
முதலில் கோவிலுக்கு சென்றதும் அங்குள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு விட்டு பிறகுதான் நவகிரகங்களை வழிபட வேண்டும். நவகிரகங்களை வழிபடுவதில் வலபுறம் இடபுறம் என குழப்பிக் கொள்ளாமல் மொத்தமாக ஒன்பது சுற்று சுற்றினாலே போதும் . அதேபோல் எந்த கிரகத்தையும் கையில் தொட்டு வணங்க கூடாது .
ஒவ்வொரு கிரகத்துக்கு ஒவ்வொரு ஆற்றல் உண்டு .முறையாக வழிபாடும் போது அதன் பலனை நாமும் பெற முடியும் .அப்படி எந்த கிரகத்தை வழிபட்டால் நம் என்ன பலனை பெறுவோம் என தெரிந்து கொள்வோம் .
சூரிய வழிபாடு வாழ்வில் ஆரோக்கியத்தையும் மங்கலமும் பெற்று தரும்.
சந்திர வழிபாடு வாழ்வில் உங்களை புகழ்பெற செய்யும்.
செவ்வாய் வழிபாடு தைரியத்தை தரும்.
புதன் வழிபாடு நல்ல அறிவையும் ,தெளிவான சிந்தனையும் பெற்று தரும்.
குரு (வியாழன்) வழிபாடு புத்திர பாக்கியத்தையும் செல்வத்தையும் பெற்று தரும்.
சுக்கிர வழிபாடு வீடு நிலம் வாங்கும் யோகம், நல்ல வாழ்க்கை துணை ஆகியவற்றை கிடைக்கச் செய்யும்.
சனிபகவானை வழிபட்டால் நீண்ட ஆயுளை பெறலாம்.
ராகு வழிபாடு பயணத்தால் நன்மையை ஏற்படுத்தி தரும்.
கேது வழிபாடு மோட்சம் தரும் ,ஞானம் பெருகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
மேலும் அந்தந்த கிரகங்களுக்கு உரிய கிழமைகளில் வழிபாடு செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.
ஆகவே இனிமேல் நீங்கள் கோவிலுக்குள் செல்லும்போது குழப்பம் இல்லாமல் தெளிவாக சென்று மனநிறைவோடும் முழு மனதோடும் வழிபடுங்கள். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.