இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
இதன்படி, தேர்தலில் மொத்தம் 8ஆயிரத்து888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 13ஆயிரத்து421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்காளர் அட்டை பெறாமல், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்தால், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு , செல்லுபடியாகும் வாகன சாரதி உரிமம் அல்லது பொது சேவை ஓய்வூதிய அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டை , தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை, சாதாரணவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை இதில் ஏதாவது தம்மை அடையாளப்படுத்தும் ஒன்றினை எடுத்துச் சென்று வாக்களிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 64ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களோடு
தேர்தலில் வாக்குப்பதிவை கண்காணிக்க உள்நாடு வெளிநாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுதுபொருட்களும் இன்று தொடக்கம் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் எனவும், காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் நாளைய தினம் ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.