(இன்று ஒரு தகவல்)
பெரும்பாலும் காடுகளிலும் சில இடங்களில் வீடுகளிலும் வளரும் நாவல் மரத்தில் இருந்து விழும் நாவல் பழத்தில் பல்வேறு சத்துக்கள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பல்வேறு மருத்துவ பயன்களையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது.
இவ்வாறு சத்து மற்றும் மருத்துவ பயன்களை கொண்டுள்ள நாவல் பழத்தின் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்
நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் பி1, பி2, பி5 சத்துக்கள் அதிகமாக உள்ளது. நாவல் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கங்கள் மறைந்து பொலிவு பெறும்.
நாவல் பழம் சாப்பிடுவது வயிற்றில் உள்ள புண்களை குணப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நாவல் பழத்தில் உள்ள அண்டி அக்ஸிடெண்டுகள் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
வெண்புள்ளி, அரிப்பு உள்ளிட்ட தோல் சார்ந்த நோய்களை சரிசெய்யும் தன்மை நாவல் பழத்திற்கு உண்டு. நாவல் பழத்தில் செய்யப்பட்ட வினிகரை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்.
நாவல் மர இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை அகலும்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.