கடந்த சில காலமாக பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பல்வேறு விதமான திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் 27.11.2024 அகப்பட்டார்.
கண்ணகி நகர் பகுதியில் உறவினரின் வீட்டுக்கு நிகழ்வொன்றுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிடம் கொட்டும் மழையில் வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியால் சென்ற அந்த பெண் அணிந்திருந்த தாலி கொடியினை அறுத்து தப்பி சென்றுள்ளனர்.
தப்பிச்செல்ல முற்பட்ட வேலை இருவருக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரண்டு திருடர்களின் ஒருவரது தொலைபேசி அந்தப் பெண்ணிடம் அகப்பட்டு விட்டது.
இச்சம்பவம் தொடர்பாக தாலியை பறிகொடுத்த பெண்ணின் முறைப்பாட்டுக்கு அமைவாக தொலைபேசியில் உள்ள விவரங்களுக்கு அமைவாகவும் சந்தேக நபர் ஒருவரும் பெண்ணிடமிருந்து அபகரிக்கப்பட்ட தாலியும் ஒரு 1 தொலைக்காட்சி பெட்டி 01 தொலைபேசி ஆறு 06 தண்ணீர் பம்பிகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது
மற்றும் ஒரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார் தலைமாறவாகி உள்ள சந்தேகம் நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதிமன்றம் முட்படுத்தப்பட்டு நீதிவான் உத்தரவுக்கு அமைவாக 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்பொழுது தருமபுர பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பெட்டி நீர் பம்பி என்பனவற்றை தொலைத்தவர்கள் தருமபுர பொலிஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளுமாறு தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சதுரங்க தெரிவித்துள்ளார்.
தர்மபுரம் பொலிஸ் பிரிவு மற்றும் புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவுகளில் களவாடப்பட்ட பொருட்களை தற்போது மீட்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.