இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தவர் சந்தீப். இவரது மனைவி குஞ்சன்.
கடந்த பல ஆண்டுகளாக சந்தீப்புக்கும் அவரது மனைவி குஞ்சனுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக இருவரும் ஒருவரையொருவர் சந்தேகித்தனர்.
குஞ்சனிடம் இருந்து சந்தீப் விவாகரத்து பெற விரும்பினார். அவர் ஒரு சட்டத்தரணியை கூட அணுகியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மதியம், சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார்.
ஆனால் குஞ்சன் அதை சாப்பிட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதத்தில் சந்தீப் மனைவியை தாக்கத்தொடங்கினார்.
மனைவியும் சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தீப் மனைவியின் கழுத்தை நெரித்தில் அவர் மயங்கி விழுந்தார்.
பின் தனது மகன்களை கூப்பிட்டு மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல சொன்னார்.
அவர்கள் சென்றதும் சந்தீப் மனைவியை கொன்றதாக கூறி பொலிஸில் சரணடைந்தார். குஞ்சன் இறந்துவிட்டதாக வைத்தியர்களும் அறிவித்தனர். சந்தீப்பை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.