(இன்று ஒரு தகவல்)
காய்கள், இறைச்சி வகைகள், மசாலாப் பொருட்கள் என்பவற்றை கலந்து ஒன்றாக கொதிக்க வைத்து குடிப்பது தான் சூப். இதன்படி, சூப்களில் ஆட்டிறைச்சி, ஆட்டுக்குட்டி இறைச்சி, ஆட்டின் கால்களின் எலும்புகள் உள்ளிட்டவைகள் போடுவார்கள்.
இது தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. பண்டைகாலம் முதல் ஆட்டுக்கால் சூப் உடல் நல பிரச்சினைகளுக்கு மருந்தாக கொடுக்கப்பட்டுவருகிறது.
சளி பிரச்சினையுள்ளவர்களுக்கு நல்ல காரமான ஆட்டு கால் சூப் செய்து கொடுத்தால் உடனே சளி பிரச்சினையிலிருந்து விடுபெறலாம்.
இப்படி ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறது.அந்த வகையில், ஆட்டு கால் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? யாரெல்லாம் குடிக்கலாம்? என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
நோயெதிர்ப்பு அமைப்பு நோய்க்கிருமிகள் தாக்கம் அதிகமாக இருக்கும். இப்படியான நேரங்களில் காரசாரமாக சூப் குடிக்கலாம். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்குகிறது.
ஆட்டு கால் சூப்பில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதன்படி, ஆட்டுக்கால் சூப்பில் கால்சியம், தாமிரம், போரான், மாங்கனீஸ் மற்றும் தாதுக்கள் உள்ளன. அத்துடன் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன.
இது எலும்புகளை வலுப்படுத்தும். சுவாசத்துடன் தொடர்பான நோய்கள் குணமாகும் என கூறப்படுகின்றது. மற்றும் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
ஆடு கால் சூப்பில் சிஸ்டைன், அர்ஜினைன், குளூட்டமைன், புரோலின், அலனைன் மற்றும் லைசின் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடலின் செயல்பாட்டிற்கு தேவையான முக்கியமான அமிலங்களை வழங்குகிறது.
மூட்டு வீக்கம் அல்லது வீக்க பிரச்சனை உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம். ஏனெனின் இதில் குருத்தெலும்பு வளர்ச்சி மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த குளுக்கோசமைன் மற்றும் காண்ட்ராய்டின் முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.