பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு வரைபு தயாரிக்கப்பட்டு 2025 ஒக்டோபர் 28 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 2025 டிசம்பர் 10- ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைமை அலுவலகம், சபையின் நூலகங்கள், மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் என்பவற்றில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.