முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று காலை 7 மணியளவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலை மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த பாண் வாகனத்தில் பணிஷ் ஒன்றை வாங்கிவிட்டு திரும்பி சென்றபோது கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டாரக வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதியான புத்தளம் பகுதியினை சேர்ந்த நபரை கொக்கிளாய் பொலிஸ் கைது செய்துள்ளதுடன், குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருநாட்டுகேணி அரச தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாதீஸ்வரன் நர்மதா என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்தவராவார்.
இதேவேளை, பாடசாலை ஆரம்பிக்கும், முடிவடையும் வேளைகளில் குறித்த பகுதியில் பொலிஸ் எவரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரித்துள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திய சாரதி கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் கொக்குதொடுவாய் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி அதில் ஒருவர் உயிரிழந்திருந்ததாகவும் இன்றும் அதே சாரதியே குறித்த விபத்தினை ஏற்படுதியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.