ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இருந்தே ஒரு குற்றச்சாட்டை திரும்பத் திரும்ப முன்வைத்து வரு கின்றார். நாடு நெருக்கடி நிலையில் இருந்தபோது அதாவது 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி பிரதமர்பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சவிலகியபோது பொறுப்பேற்க வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகி யோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்கவில்லை. துணிவுடன் தான்மட் டுமே முன்வந்து பொறுப்பேற்று நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டதாகவும் ரணில் கூறிவரு கின்றார். இந்தக் கூற்றை ஜனாதிபதித் தேர்தல் பரப் புரையின்போதும் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கூறியிருக்கின்றார்.
இவரது கூற்றுக்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித், 'நான் அதிகாரத்தை எடுக்கவில்லை என்று பல் வேறு தரப்பினர் கூறிக்கொண்டிருந்தாலும் ராஜபக்சக் கள் உள்ள இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை. திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகளுடன் டீல் இல்லாத காரணத்தால் பதிலீடாக ஜனாதிபதிப் பதவியை பொறுப்பேற்கவில்லை. நான் இந்த ஜனாதிபதி கதி ரைக்கு மக்களின் வாக்குகளாலே தெரிவுசெய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரவோ, '2022ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபயவுக்கு ஒரு கடிதத்தை எழுதினோம். இந்த நெருக்கடியை தீர்த்து வைக்க தேசிய மக்கள் சக்தி தயார். எங்களுக்கு அதிகாரத்தை தாருங்கள் என்று. குறைந்தபட்சம் அந்தக் கடிதம் கிடைத்தது என்று கூட எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. அடுத்ததாக நாடாளுமன்றத்தில் நான் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதிப் பதவிக்காக போட்டியிட்டேன். எங்களுக்கு வாக்களித்திருக்கலாமே. எங்களுக்கு சார்பாக நாடாளுமன்றத்தில் எவருமே வாக்களிக்கவில்லை. அதற்கான காரணம் என்ன? அவர்கள் ஒருபோதுமே எங்களுக்கு அப்படி அதிகாரத்தைக் கொடுக்கமாட் டார்கள்' என்று தெரிவித்திருக்கின்றார்.
அநுரவின் பதிலடியால் சஜித்தின் தடுமாற்றம் வெளிப்படையாகியிருக்கின்றது. சஜித் பிரேமதாஸ, ராஜபக்சக்கள் இருக்கும் இடத்தில் தான் இருக்க மாட்டேன் என்று குறிப்பிடுகின்றார். ஆனால் நாடாளும ன்றத்தில் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் 2022ஆம் ஆண்டு இடம்பெற்றபோது, அதில் களமிறங்குவதை இறுதி நேரத்தில் தவிர்த்துக் கொண்டு அதுவரை ராஜபக்சக்கள் முகாமிலிருந்த டலஸ் அழகப் பெருமவின் பின்னால் ஒளிந்து கொண்டார். டலஸை, சஜித் ஆதரித்தார் .ராஜபக்சக்கள் இருக்கும் இடத்தில் தான் இருக்க மாட்டேன் என்பதால் பதவியை ஏற்கவில் லை என்பதைக் குறிப்பிடும் சஜித், அதற்கு முரணாகவே நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் நடந்து கொண்டார்.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் பெரமுனவின் அர சாங்கத்தையே மக்கள் விரட்டியடித்தார்கள். பெரமுன வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தேசிய மக்கள் சக்தியில் இணைய வந்தபோதும் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அநுர பகிரங்கமாகக் கூறியிருந்தார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க பெரமுன வினரை அதாவது மக்கள் யாரை விரட்டியடித்தார்களோ அவர்களை அரவணைத்துக் கொண்டார். அதேபாணியில் சஜித்தும் தற்போது பெரமுனவின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்சவையும், மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கரு ணாதாச கொடித்துவக்குவையும் தனது கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார். சஜித்தின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகள் அவரது தடுமாற்றத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. அது ரணிலின் குற்றச்சாட்டை சரியாக்கும் வகையில் அமைந்தி ருக்கின்றது என்பதும் இங்கு நோக்கத்தக்கதே.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.