வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF) நிராகரித்துள்ளதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
விசேட முதலீட்டு வசதி கவுன்சில் (SIFC) இது தொடர்பான பரிந்துரையை சர்வதேச நாண நிதியத்திற்கு முன்மொழிந்தது. அத்தகைய வரி நிவாரணம் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், நிதி ஒழுக்கம் குறித்த தனது நிலைப்பாட்டை முன்வைத்துள்ள சர்வதேச நாண நிதியம் இந்தக் கோரிக்கையை நிராகரித்ததாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் கூற்றுப்படி, முதலீட்டு வாய்ப்புகள், நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கக்காட்சிகள் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சாகாயை குவாடருடன் இணைக்கும் முன்மொழியப்பட்ட ரயில் திட்டம் இது பிரதானமானதாகும். இது ரெகோ டிக் சுரங்கத்திலிருந்து துறைமுக நகரத்திற்கு கனிமங்களை கொண்டு செல்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கான இந்தத் திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் வலியுறுத்தினர்.அதன் மேம்பாட்டிற்கான வரி விலக்குகளை அங்கீகரிக்க சர்வதேச நாண நிதியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
நிதி அமைச்சு மற்றும் ரயில்வே அமைச்சுடன் இணைந்து ரயில்வே திட்டத்திற்கான சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சாத்தியமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிதியை வழங்குவதற்கு முன்பு அரச உத்தரவாதங்களைக் கோரியுள்ளனர். இருப்பினும், தற்போதைய கடன் ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் அரசாங்கம் ஒவ்வொரு முதலீட்டுத் திட்டத்திற்கும் அத்தகைய உத்தரவாதங்களை வழங்க முடியாது என்று எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
ஏனைய முன்னேற்றங்களில், மின்சார விலைகளைக் குறைக்கும் திட்டத்திற்கு சர்வதேச நாண நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. மின்சாரத்திற்கான அடிப்படை கட்டணம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய மின்சார முறைப்படுத்தல் ஆணைக்குழு (NEPRA) மற்றும் எரிசக்தி அமைச்சு மாற்றங்களைச் செய்ய அதிகாரம் அளித்துள்ளது என்று எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், விநியோக நிறுவனங்களில் (DISCOs) தனியார்மயமாக்கலின் மெதுவான வேகம் குறித்து சர்வதேச நாண நிதியம் கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த நிறுவனங்களின் செயல்திறன் கவனிக்கப்படாவிட்டால் மின் துறையில் முன்னேற்றம் குறைவாகவே இருக்கும் என்று ஜஎம்எப் வலியுறுத்துகிறது.
வரி விலக்குகளை IMF நிராகரிப்பது, நிதி ஒழுக்கத்தில் அதன் வலுவான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. குறுகிய கால ஊக்கத்தொகைகளை விட நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னுரிமைப்படுத்தி, பாகிஸ்தான் நிலையான நிதி நடைமுறைகளைப் பேணுவதை இது உறுதி செய்கிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.