பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்களை வைத்து புதிய நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களின் போட்டியாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் போட்டியாளர்கள் ஒருபுறமும், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துவரும் ரசிகர்கள் மற்றொரு புறமும் என - இரு அணிகளாக இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியைப் போன்று, இரு தரப்பின் விவாதங்களை அடிப்படையாக வைத்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
பிக் பாஸ் -8 நிகழ்ச்சி ஒக்டோபர் 6ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்களை வைத்து புதிய நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் சந்தேகங்கள், பிக் பாஸ் போட்டியாளர்களின் செயல்பாடுகளில் இருந்த விமர்சனங்கள் ஆகியவற்றை ரசிகர்கள் முன் வைப்பார்கள் என்றும் அதற்கு பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் பதில் அளிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதால் நிகழ்ச்சியில் மீதான எதிர்பார்ப்பு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது எனலாம்.
தற்போது நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாவதால் பிக் பாஸ் 8 மீதான எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், முன்னாள் போட்டியாளர்களை வைத்து புதிய நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு கூடுதல் விளம்பரமாக இருக்கும் என்ற முடிவில் புதிய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.