இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரும் நில ஆக்கி ரமிப்புக்குள் கச்சதீவையும் உள்வாங்கியிருக்கின்றார் தமிழக ஆளுநர் கே.என்.ரவி. இந்தியாவின் சுதந்திரதி னம் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி கொண்டாடப்படு கின்றது.அதற்கு முன்னைய நாளை 'பிரிவினைவாத துன்பியல் தினமாக' அங்கு கடைப்பிடிக்கின்றனர். பிரிட்டிஷார் பாகிஸ் தானுக்கு சுதந்திரம் வழங்கியபோது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை 'பிரிவினைவாதம்' என்ற கண் ணோட் டத்தில் பார்க்கின்றது பாரதம். இதை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே இந்தி யாவின் 'நவயுக நில ஆக்கிர மிப்பு துன்பியலாக' கச்சதீவைக் கோடு காட்டியிருக்கின் றார் தமிழக ஆளுநர். 'பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது பாகிஸ்தான் எம்மிடமிருந்து (இந்தியாவிடமிருந்து) பெரும் நிலப்பரப்பைப் பறித்துக்கொண்டதை எம்மில் பெரும்பாலானவர்கள் மறந்துவிட்டனர். தற்போதும் இந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் நிலப்பறிப் புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கிழக்கு லடாக் கில் பெரும் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயன்றுகொண்டி ருக்கின்றது. கச்சதீவை இலங்கைக்கு வழங்கியதால் எமது மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையால் தாக்குதல் களும் துப்பாக்கிச்சூடும் நடத்தப்படுகின்றது' என்றும் தமிழக ஆளுநர் கூறியிருக்கின்றார்.
இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்சினைகள் என்பவை மிக வலியவை என்பதுடன், அவை பரமவைரிகள் இடையிலான விவ காரமும்கூட ஏதேனும் விவாதங்கள் இடம்பெற்றாலோ அல்லது மோதல்கள் இடம்பெற்றாலோ இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்புவமைகாட்டி பழக்கப்பட்டவர் கள் நாங்கள். அப்பேர்ப்பட்டதீவிரமானதும், தீர்க்கப்பட முடியாததும், உலகப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியது மான விவகாரத்தில், கச்சதீவையும் வலிந்து புகுத்துவதற்கு தமிழக ஆளுநர் முயன்றுகொண்டிருப்பது அபத்தத்தின் உச்சம். மட்டுமல்லாமல், அவருடைய அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையையும் அறியாமையையும்தான் இது வெளிப்படுத்துகின்றது.
ஆளுநர் என்பவர் கட்சிக்கொடிகளால். சிக்கொடிகளால் அடையாளப் படுத்தப்பட முடியாதவராக இருந்தபோதிலும், ஆளும் பாரதிய ஜனதாக்கட்சியின் தமிழக முகவராகவே ஆளுநர் ரவி செயற்படுகின்றார். அவர் திராவிடத்தின் மீது கொண்டுள்ள வன்மத்தால் தமிழர்களைப் பிரித்தாள முற்படுகின்றார் என்று தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள ம.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளும் நீண்டகாலமாகவே விமர்சித்துவரும் நிலையில், அந்த விமர்சனங்களின் உண் மைத்தன்மையை ஆளுநர்ரவி தற்போது புடம்போட்டுக் காட்டியிருக்கின்றார். அத்துடன், கச்சதீவு விவகாரத்தில் தமிழக மீனவர்களையும், ஈழ மீனவர்களையும் பிரித்தாள் வதற்கு எவ்வளவுதூரம் அதிகாரம் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது என்பதையும் ஆளுநர் ரவியின் உரையில் இருந்து அறிவார்ந்த தமிழர்கள் உய்த்துணர்ந்து கொள்ளவேண்டும்.
ஈழத்தவர்களுக்கும் சோழத்தவர்களுக்கும் இடை யிலான உறவென்பது இன்று, நேற்று நிகழ்ந்ததல்ல. இது உலகின் முதுபெரும் இருகுடிகளுக்கு இடையிலான பிணைப்பு. இந்தப் பிணைப்பு வலுப்பெற்றால் அது பிராந்திய அரசுகளின் இருப்புக்கு ஆபத்தையே விளை விக்கும். எனவே, தணல் நிலையில் கனன்று கொண்டி ருக்கும் அத்துமீறிய மீன்பிடி மற்றும் கச்சதீவு விவகாரங் களில் அவ்வப்போது மண்ணெண்ணெய்யை ஊற்றிவிட அதிகாரக் கதிரைகள் எத்தனிக்கவே செய்யும். இந்தியா -பாகிஸ்தான் பிரச்சினை பேசப்பட்ட அதே இடத்தில் - அதேநேரத்தில், கச்சதீவும் சமானமாக நிற்கின்றது என்றால் இதை எவ்வளவு 'போர்ப்பதற்றம்' நிறைந்ததாக மாற்றுவதற்கு அதிகாரம் நினைக்கிறது என்ற புரிதலை தமிழக, ஈழ உறவுகள் வளர்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில், பிரித்தாளும் பிணம்தின்னிகளின் காலம் இது!!
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.