கானாவின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்ட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா, விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார். அதிபர் ஜான் டிராமணி மகாமா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் நாட்டின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”-வை பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்தார்.
விருதை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “கானாவின் தேசிய விருதான இவ் விருது கானா அதிபரால் வழங்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கானா அதிபர் மகாமாவுக்கும், கானா அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த கெளரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
நமது இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் நம்பிக்கைக்குரிய எதிர்காலம், நமது வளமான கலாச்சார பன்முகத்தன்மை, மரபுகள், இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான நீடித்த வரலாற்று பிணைப்புகள் ஆகியவற்றுக்கு இந்த கெளரவத்தை நான் அர்ப்பணிக்கிறேன்” -என்று தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.