இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை, பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக மும்பை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு செம்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
இதன் தீவிர தன்மையை கருத்திற் கொண்டு பொலிஸார் ஏனைய விசாரணை நிறுவனங்களுக்கு தகவல் அளித்து விசாரணையைமேற்கொண்டனர்.
விசாரணையில் கைதான இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.