பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகரான ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக தனது 75ஆவது வயதில் நேற்று காலமானார்.
1949ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்த இவர், திரையுலகில் மிகப் பிரபலமான நடிகர்களுள் முக்கியமானவர்.
1970 மற்றும் 1980 களில் மாறுபட்ட, அழுத்தமான பாத்திரங்களில் நடித்த, ராஜேஷ் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பதித்திருந்தார்.
1974 இல் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் நடிகர் ராஜேஷ் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், தமிழில் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உட்பட பரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.