பிலிப்பைன்ஸின் தெற்கே மகுவின்தனாவோ டெல் சுர் மாகாணத்தில் பீச் கிங் ஏர் 350 ரக தனியார் விமானம் ஒன்று இன்று மதியம் 2 மணியளவில் விபத்தில் சிக்கியது.
இதில் வெளிநாடுகளை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 ஆண்கள் உள்ளிட்ட 4 பேரின் உடல்களை பிரதேச மக்கள் கண்டறிந்து பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.