டாக்குத்தர் அர்ச்சுனா அரெஸ்ட் பண்ணுப்பட்டிருக்கிறார். தனக்குச் சம்பந்தமில்லாத ஆஸ்பத்திரிக்குள்ளபோய், அத்துமீறி நடந்ததாலையும். கடமைக்கு இடையூறு விளைவிச்சதாலையும் தான் அவரை அரெஸ்ட் பண்ணி, மறியலில் போட்டிருக்காம். அர்ச்சுனா தன்ர கட்டுப்பாட்டுக்க இல்லாத ஒரு ஆஸ்பத்திரிக்குள்ள நுழைஞ்சது பிழைதான். ஆனால் எதுக்காக அவர் போனார் எண்டதிலதான் விசயம் இருக்கு: அந்த ஆஸ்பத்திரியில ஒரு இளம் பொம்பிளைக்கு குழந்தை பெத்த கொஞ்சநாளில இரத்தப்போக்கு வந்ததால, அவசரமா அவாவை இரவு நேரத்தில கொண்டந்து சேர்த்திருக்கினம். ஆனால் அவாவுக்கு இரத்தம் போறதை நிப்பாட்ட அங்க இருந்த டொக்டர்மாரும், நேர்ஸ்மாரும் பெரிசா முயற்சி எடுக்கேலை. கையில் ஏதோ மிசினைப் போட்டிட்டு தங்கடபாட்டில போனுக்குள்ள புகுந்திட்டினம். பிறகு அந்தப் பிள்ளையின்ர தாய்க்காரி நேர்ஸ்மாரிட்டபோய் தன்ரபிள்ளையைக் காப்பாத்தச் சொல்லிக் கெஞ்சி இருக்கிறா. அதுக்கு நேர்ஸ்மார் 'எங்கட டியூட்டியைப் பாக்க எங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்கட அலுவலைப் பாருங்கோ எண்டிருக்கினம். தாய்க்கு கோபம் வந் திட்டு. 'என்ர பிள்ளைக்கு எவ்வளவு ரத்தம் போகு தெண்டு உந்தப் போனில தெரியுமோ?' எண்டு கேட்டிருக்கிறா.அதில நேர்ஸ்மார் சூடாகிட்டினமாம். 'அவாக்கு மிசின் பூட்டியிருக்கு. நாங்கள் போன் பார்த்தாலும் அவாவையும் கவனிச்சுக்கொண்டு தான் இருக்கிறம். எங்கட வேலையில பிழை பிடிக்க வந்திட்டியளோ?' எண்டு பாய்ஞ்சு விழுந்திருக்கிணம். அந்த அப்பாவித் தாயால அதுக்கு மிஞ்சி வேற என்ன செய்யமுடியும்? அவா பேசாமல் இருந்திட்டா.
விடிஞ்ச பிறகு டியூட்டி மாறி, வேற நேர்ஸ் ஆக்கள் வந்திருக்கினம். சத்தியவானை மீட்க சாவித்திரி போராடினமாதிரி, அந்தத் தாய் புதிசா வந்த நேர்ஸ் மாரிட்டயும் போய், 'என்ர பிள்ளைக்கு ஏலாமல் இருக்கு. இரவில நிண்டவை ஒழுங்காக் கவனிக்கேலை. நீங்களாவது கருணை காட்டுங்கோ' எண்டு கெஞ்சியிருக்கிறா. பகல் வந்த நேர்ஸ்மார். இரவு டியூட்டியில நிண்டவை மாதிரி எழுப்பம் காட் டாமல், அக்கறையாபோய் பார்த்திருக்கினம். ஆனால் அவைக்கு நிலைமை பிழை எண்டு தெரிஞ் சிருக்கவேணும். உங்கட மகளை போய் ரத்தத்தை கழுவிட்டு வரச் சொல்லுங்கோ அவசரமா' எண்டு கெதிப்பண்ணி இருக்கினம். மகளும் பாத்ரூமுக்க போய், ரத்தத்தை கழுவிப்போட்டு வரேக்க வழியிலையே மயங்கி விழுந்திட்டா. உடன ஆணள அவசர சிகிச்சைப் பிரிவுக்குள்ள கொண்டு போட்டினம், அந்த அறைக்குள்ள நேர்ஸ்மாரும் டொக்டர்மாரும் போய் வந்தபடி இருக்கினமே தவிர, என்ன நடக்குது எண்டு ஒண்டும் சொல்லேலையாம். பிறகு நான் 'உங்கட மகளை போய்ப் பாருங்கோ. நாங்களும் ஒண்டும் செய்யேலாது' எண்டு டொக்டர்மார் கையை விரிச்சிருக்கினம். 'ஐயோ என்ர பிள்ளையை கொண்டிட்டியளே' எண்டு அந்த அப்பாவித் தாய் அழுது குழறித் திட்டிப்போட்டுத்தான். மகளின்ற சடலத்தைப்பார்த்தவா.
இரவே நல்ல ட்ரீட்மெண்ட் குடுத்திருந்தால், அந்த இளம்பொம்பிளையைக் காப்பாத்தியிருக்கலாம். 'எல்லாம் எங்களுக்குத் தெரியும்' எண்ட திமிரும், போன் பார்க்கிற அவாதியும் சேர்ந்து அநியாயமா ஒரு உயிரைப் பறிச்சுப்போட்டுது. அந்தப் பிரச்சினை சம்பந்தமா விசாரிக்கத்தான் டாக்குத்தர் அர்ச்சுணா போய். இப்ப மறியலுக்குள்ள இருக்கிறார். அர்ச்சுனாவைப் பிடிக்கிறதில காட்டின அணுகுமுறையை, இப்பிடி அநியாயமா ஒரு உயிரைப் பறிச்ச ஆக்களில காட்டுவினமோ?
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.