புதினம்_தெரியுமோ!!!!!!!!!!!!!!
புதினம்_தெரியுமோ!!!!!!!!!!!!!!

ஒருமாதிரி இந்தியாவில எலக்சன் முடிஞ்சு ரிசல்ட்ரும் வந்திட்டது. ஆனால் இஞ்ச எப்ப எலக்சன் நடக்கும்? எந்த எலக்சன் நடக்கும்? எண்டதை வெத்திலையில மை போட்டுப் பார்த்தாலும் கண்டுபிடிக்க ஏலாமல் கிடக்குது. என்னதான் மோடியை எல்லாரும் சர்வாதிகாரி மாதிரி வர்ணிச்சாலும், அந்தாள் அந்தந்த நேரத்துக்கு எல்லா எலக்சனையும் வைக்குது. ஆனால் இஞ்சஜெண்டில்மென் எண்டு கோட் சூட் போட்ட ரணிலார் தான் எலக்சனை வைக்காமல் ஒளிச்சுப் பிடிச்சு விளையா டிக்கொண்டு இருக்கிறார். எவ்வளவுகாலம் தான் அவரும் இப்பிடிப் பேய்க்காட்ட ஏலும்? எப்பிடியோ ஆள் ஆய்ஞ்சு ஓய்ஞ்சு எலக்சன் எண்ட கட்டுக்கொடிக்கு வரத்தானே வேணும். அவரோட ஒட்டிக்கொண்டிருக்கிறவைக்கு அவர் என்ன எலக்சனுக்கு பிளான் போடுறார் எண்டது கொஞ்சமெண்டாலும் விளங்கியிருக்கும் . அதால இப்பவே மெல்ல மெல்ல எலக்சன் அடுக்குகளைச் சத்தம் சந்தடியில்லாமல் பாக்க வெளிக்கிட்டுட்டினம்.

தியேட்டர்கார மீன்குஞ்சு அமைச்சரும் பழையபடி தன்ர வித்தையைக் காட்டி. எல்லாரையும் தன்ர பக்கம் கொண்டுவாற வேலையளைத் தொடங்கிட்டாராம். சமுர்த்தி ஒப்பீஸர்மாருக்கு எண்டு ஒரு தொழிற்சங்கம் இருக்கு. பிரதேச செயலகங்களில இருக்கிற கிளைச்சங்கங்களுக்கு தெரிவு நடந்து, பிறகு அதில இருந்து மாவட்டக்கிளைக்கு ஆக்களைத் தெரிவு செய்யிறவை. இவ்வளவு காலமும் இதெல்லாம் ஒழுங்காத்தான் நடந்து வந்தது. இப்பிடியிருக்கேக்க இந்தச் சங்கத்துக்குள்ள மூக்கை நுழைச்சிருக்கிறார் மீன்குஞ்சு அமைச்சர் ரண்டு மாதத்துக்கு முதல் யாழ்ப்பாணத்தில உள்ள மண்டபம் ஒண்டுக்கு. யாழ்ப்பாணத்தில உள்ள எல்லாச் சமூர்த்தி உத்தியோகத்தர்மாரையும் கட்டாயம் வரச்சொல்லி அமைச்சர் ஓர்டர் போட்டிருக்கிறார். அங்க 'உங்கட சங்கங்கள் எல்லாம் இப்ப ஒழுங்கா இயங்கிறேலை. அதால நான் மாவட்டச் சங்கத்துக்கு தற்காலிகமா ஒரு 'வலுவூட்டல்" குழுவைப் போடுறன். அவை எல்லாப் பிரதேச செயலகங்களுக்கும் போய், அங்கத்தைக் கிளையளைத் தெரிவு செய்யட்டும்' எண்டு சொல்லியிருக்கிறார். சொன்னதோட நிக்காமல் அந்த வலுவூட்டல் குழுவைக் கொண்டு. பிரதேசக் கிளையளையும் தெரிவு செய்திருக்கிறார். பிறகு பிரதேச செயலகக் கிளையளில உள்ளவையை கிட்டடியில கூப்பிட்டு மாவட்டக்கிளையையும் தெரிவு செய்யச் சொல்லியிருக்கிறார்.

அதில கொஞ்சம் காரசாரமான விவாதங்கள் நடந்திருக்கு. முந்தி சங்கத்தில இருந்த தியேட்டக்காரரின்ர விசுவாசிகள் பேந்து 'அமுல்பேபியின்ர காலத்தில் அவரோட ஒட்டிக்கொண்டிருந்தவை. இவை கனகாலமா சங்கத்தின்ர கணக்கு வழக்குகள் காட்டேல எண்டு மற்றத்தரப்பாக்கள் சொல்லியிருக்கினம். மாவட்டக் கிளை தெரிவுநடக்கேக்க, முந்தி இருந்தவையும் போட்டியிட நிண்டிருக்கினம். அப்ப அங்க இருந்தவை அவையின்ர கணக்கறிக்கை கேக்க அவை கோபத்தில வெளியில போட்டினமாம். இதுவும் அமைச்சருக்கு சாதகமாப் போட்டது. அவர் தனக்கேத்த ஆக்களை மாவட்டக் கிளைக்கு போட்டிருக்கிறார். அதின்ர தலைவரா வேற கட்சிக்காரர் இருக்கிறார் எண்டும், அதால கட்சி சார்பில்லாத சங்கம் எண்டும் அந்தச் சங்கக்காரர் சொல்லுகினம். ஆனால் மண்டையில இருந்த கொண்டையை மறந்திட்டும், புதுசா தெரிவான சங்கக்காரர். கூட்டம் நடந்த அடுத்தநாளே தியேட்டரில் போய் அவரைச் சந்திச்சிருக்கினம். ஆமை புகுந்த வீடும் தியேட்டர்காரர் தலையிட்ட விசயமும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை.

 

#eelamnews #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #புதினம்

455 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.