புதினம்_தெரியுமோ!!!!!!!!!!!!!!!!!!!!!
புதினம்_தெரியுமோ!!!!!!!!!!!!!!!!!!!!!

எப்பவும் எல்லாரும் எங்களுக்குக் கீழதான் இருக்க வேணும் எண்டதுதான் தமிழாக்களின்ர எண்ணப்பாடு. தப்பித்தவறி ஆரும் முன்னேறப்பாக்கினம் எண்டால் ஏதாவது செய்து அவையைக் கீழ விழத்துற வேலையொம். மாங்காய் விழுத்துற மாதிரி எங்கட ஆக்களுக்கு கைவந்த கலை. அதுவும் மற்றவையை மேய்க்கிற அரசாங்க உத்தியோகத்தில் ஒராளை ஒராள் எப்ப விழுத்துவம் எண்டு சான்ஸ் பாத்துக்கொண்டு இருப்பினம். அந்தளவுக்கு அரசாங்க ஒப்பீஸ்களில் ஒரே உள்குத்தும், கால்தடம் போட்டு விழுத்திறதும் சகஜமா நடக்கும். அதைமாதிரி தாங்கள் மேல போகாட்டியும் பரவாயில்லை. தங்களுக்குக் கீழ வேலை செய்யிற வேலையாக்கள் ஒரு சொட்டுக்கூட மேல எழும்பக்கூடாது எண்டதில கடும் கவனமா இருப்பினம்.

பிரதேச சபையளில் சிற்றூழியர் தரத்தில இருக்கிறவையில, ஆரும் பட்டதாரியள் இருந்தால் அவையின்ர விவரத்தை அனுப்பச் சொல்லி ஒரு சுற்றுநிருபம் கிட்டடியில் வந்தது. இப்பிடி விவரத்தை அரசாங்கம் ஏன் எடுக்குது எண்டதில எங்கட மேலதிகாரிமார் 'விவரமா இருப்பினம். சிற்றூழியர்களில் படிச்சு பட்டம் எடுத்திருந்தால், அவை யின்ர படிப்புக்குப் பொருத்தமான பதவிக்கு அத்தி பூத்தாப் போல எப்பவாவது அரசாங்கம் நியமிக்கிறது. அப்பிடியொரு சான்ஸ் இப்ப வாய்ச்சிருக்குது. எலக்சன் வாறதால இப்பிடி சிற்றூழியர்களில் பட்டதாரியா இருக்கிறவையை பதவி உயர்த்தினால் அவையின்ர வாக்கை எடுக்கலாம் எண்டது அரசாங்கத்தின்ற பிளான். ஆனால் இப்பிடியொரு சுற்று திருபமே வராதமாதிரி ஒண்டும் தெரியாத பச்சைப்பிள்ளை மாதிரி இருப்பமெண்டுறது அரசாங்க அதிகாரிகளின்ர பிளான். இப்பிடியொரு சுற்றுநிருபம் வந்திருக்கெண்டு எப்பிடியோ சில சிற்றூழியர்மார் மணந்து பிடிச்சுப் போட்டிணம்.

சேர், எங்களில பட்டதாரி ஆக்கள் இருந்தால் அவையின்ர விவரம் அனுப்பச் சொல்லி சுற்று நிருபம் வந்திருக்காமே. நீங்கள் எங்கட விவரம் அனுப்பிட்டீங்களோ?' எண்டு போய் அவை தங்கட பிரதேசசபை மேலதிகாரியிட்ட கேட்டிருக்கினம்.'எலக்சனுக்காக உப்பிடி நிறையச் சொல்லுவாங்கள். ஒண்டும் செய்யாங்கள். அப்பிடி ஒரு சுற்று நிருபமே வரேலை. நீங்களும் அவங்கட புருடாவை நம்பிக்கொண்டிருக்கிறியளோ?' எண்டு சத்தியம் செய்யாக் குறையாச் சொல்லியிருக்கிறார் அந்த மேலதிகாரி.

இன்னொரு பிரதேசபை மேலதிகாரி, அப்பிடியொரு சுற்றுநிருபம் வந்ததெண்டு சொல்லியிருக்கிறார். இன்ரர்நெற்றில அந்தச் சுற்றுநிருபம் வந்ததால தான் டக்கெண்டு அவர் உண்மையைச் சொல்லியிருக்க வேணும். ஆனால் அதுக்குள்ள அவர் 'அது ஆரம்ப சேவைப்பிரிவில் இருக்கிற உத்தியோகத்தர்களுக்கு எண்டு போட்டிருக்கு. அப்ப அது உங்களுக்குப் பொருந்தாது. ஏனெண்டால் உத்தியோகத்தர் எண்டா அதிகாரி தரத்தில இருக்கிறவை தான்' எண்டு ஒரே போட்டாப் போட்டிருக்கிறார். ஆனால் அந்தச் சுற்று நிருபத்தில 'பி.எல்-1.பி.எல்-2, பி.எல்-3 எண்ட தரநிலை உத்தியோகத்தர்களின் விவரங்களை அனுப்பச்சொல்லி விவர மாப் போட்டிருக்கு. அந்தத் தரநிலையில இருக்கிறவை சிற்றூழியர்கள்தான். அதைக் கூட வாசிச்சு தெரியாதவை தான் மேலதிகாரிகளாம். அதைவிட உத்தியோகம் எண்டா எப்பிடி எல்லா ஒப்பீஸ் வேலையையும் குறிக்குதோ அதை மாதிரி உத்தியோகத்தர் எண்டால் ஒப்பீஸுகளில் வேலை செய்யிற எல்லாரையும்தான் குறிக்கும். அதுவும் உந்த மேலதிகாரிமாருக்குத் தெரியாதோ? இல்லாட்டி தெரிஞ்ச மாதிரி காட்டிக்கொள்ளாமல் அமசடக்கமா இருக்கினமோ? ஏருத்தன் வாழ்க்கையில் முன்னேறுறதுக்கு தெய் வாதீனமா ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா அதுக்கு உதவிசெய் யோணுமே தவிர, இப்பிடி ஒளிச்சுப் பிடிச்சு விளையாடி அவையின்ர வாழ்க்கையில மண்ணள்ளிப் போடக்கூடாது கண்டியளோ....

 

#eelamnews #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #புதினம்

208 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.